Tamilசெய்திகள்

ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்திக்கு டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தியாவின் ஜனநாயக பண்பை காப்பாற்ற நாம் ஒன்றாக சேர்ந்து பயணிப்போம். ஒன்றாக அணிவகுப்போம் என்று கூறியுள்ளார்.