ராகுல் காந்திக்கு மன உறுதி அதிகம் – தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்

இவ்வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. 2014 பொதுத்தேர்தலில் தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெல்வதற்கான வியூகங்களை அமைத்து தரும் நிபுணர்கள் முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர். அவர்கள் வகுத்து தரும் திட்டங்களுக்கு ஏற்ப கட்சிகள் தேர்தல் நேரங்களில் செயல்படத் தொடங்கின.

பல நூறு கோடிகளை கட்டணமாக வசூலித்த இத்தகைய அரசியல் வியூக அமைப்பாளர்களின் திட்டங்கள், சில நேரங்களில் சில கட்சிகளுக்கு வெற்றியை கொடுத்தது. தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநில ரோஹ்தாஸ் மாவட்டத்தை சேர்ந்த “பிகே” என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor).

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பிகே தெரிவித்ததாவது:

புலனாய்வு அமைப்புகளினால் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு அரசியல் பிரமுகர், பா.ஜ.க.வில் இணைந்து விட்டால், அவர் மீது நடவடிக்கைகள் நின்று விடுகின்றன. இது பிரதமர் நரேந்திர மோடி கூறி வரும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானது. பா.ஜ.க. பெரிதளவு மோடியை சார்ந்தே இருப்பது அக்கட்சியின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியலாம். அடுத்து வரும் தேர்தல்களில் 90 சதவீதம் பா.ஜ.க. தோற்றால் மோடி மக்களை சந்திக்க தயங்குவார்.

ஆனால், ராகுல் காந்தி கடந்த 10 வருடங்களில் பல தோல்விகளுக்கு பிறகும், நேர்மறையாக, தான் செல்ல நினைக்கும் பாதையிலேயே சரியாக செல்கிறார். ராகுலுக்கு மன உறுதி அதிகம். ஆனால், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவர் பாத யாத்திரை செல்வது சரியான முடிவு அல்ல. போர் நடக்கும் போது தளபதி, தலைமையகத்தில் இருந்து தனது படையினருக்கு வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news