ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

உத்தரபிரதேசத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் ரத்தத்துக்கு பின்னே மறைந்துகொள்வதாகவும், அவர்களது தியாகத்தை வைத்து பணம் சம்பாதிப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இது பிரதமரை அவமதிக்கும் செயல் எனவும், இது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி டெல்லி கோர்ட்டில் ஜோகிந்தர் துலி என்ற வக்கீல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்திக்கு எதிரான அந்த மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools