ராகுல் காந்திக்கு அசாம் போலீஸ் சம்மன்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கி மும்பையை நோக்கி பாத யாத்திரையை நடத்தி வருகிறார். கடந்த மாதம் அவர் அசாம் மாநிலத்தில் நடை பயணத்தை நடத்தினார். அப்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ராகுல்காந்தி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தின்போது கூட்டத்தினரை கலைக்க லேசான தடியடியை நடத்தினார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அடுத்தகட்ட விசாரணைக்காக போலீசார் அசாம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வருகிற 23-ந்தேதி பகல் 11.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் அசாம் போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அவரையும் 23-ந்தேதி அசாம் போலீசார் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அசாம் காங்கிர சார் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுலை கைது செய்ய அசாம் போலீசார் மறைமுகமாக திட்டமிடுகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news