ராகுலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் – பிரியாங்காவின் உருக்கமான பேச்சு

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று அந்த தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில், அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா மற்றும் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் பிரியங்கா தனது டுவிட்டர் தளத்தில் வயநாடு தொகுதி மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறுகையில், ‘எனது சகோதரர், எனது உண்மையான நண்பன் மற்றும் எனக்கு தெரிந்தவரையில் மிகவும் தைரியமான மனிதர். அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை வெறுமனே விட்டுவிடமாட்டார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக ராகுல் காந்தியின் வேட்புமனு தாக்கல் குறித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் தளத்தில், ‘ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கூடி தங்கள் அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியில் பங்கேற்றனர். வயநாட்டில் என்ன ஒரு அற்புதமான நாள் இது?’ என்று கூறியிருந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools