ரஷ்ய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் மும்பையில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், ஐ.ஓ.சி.யின் 2 நாள் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை சஸ்பெண்ட் செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சாசன விதிமுறையை மீறிய இந்தச் செயலில் ஈடுபட்டதால் ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடைக்கு ஆளாகி இருக்கிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களில் உள்ள விளையாட்டு அமைப்புகளை ரஷியா தங்களுடன் இணைத்தது நாடுகளின் ஒருமைப்பாடு குறித்த ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல் என ஐ.ஓ.சி. செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

தடை காரணமாக ரஷிய வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் ரஷிய நாட்டு பெயரில் பங்கேற்க முடியாது. அவர்கள் தனிப்பட்ட போட்டியாளராக தான் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports