Tamilசெய்திகள்

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் அணு ஆயுதப் போருக்கு வழி வகுக்குமா?

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் 3-ம் உலக போருக்கு வித்திடுமோ? என்ற பீதி நிலவி வருகிறது.

அதே போல் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அது அணு ஆயுத தாக்குதலாக மாறி விடுமோ? என்ற பதட்டமும் ஏற்பட்டு இருக்கிறது.

உலக அளவில் வல்லரசு நாடுகள் அணு ஆயுத போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றன. தங்கள் நாட்டு பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக தெரிவித்து இருக்கின்றன.

நாடுகள் இடையே சண்டை ஏற்பட்டால் அதில் அணு ஆயுத தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது என்று நீண்ட காலமாகவே தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ரஷியா- உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு விடுமோ? என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

சில வாரங்களாக போர் பயிற்சியில் ஈடுபட்ட ரஷியா கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணு ஆயுத போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஏவுகணைகள் மூலம் அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் பயிற்சிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.