இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக ரஷியா சென்றுள்ளார். ரஷியா சென்ற அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்று அளிக்கப்பட்டது. பின்னர் ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறுித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி ரஷியாவுக்கு வருமாறு புதின் அழைப்பு விடுத்தார். “எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்” என ஜெய்சங்கரிடம் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்த பிறகு ஜெய்சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி- ரஷிய அதிபர் புதின் ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெறும் வருடாந்திர உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா- ரஷியா இடையிலான உறவு எல்லாவற்றிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக மோடி எடுக்கும் கடினமான முடிவு என்னை அடிக்கடி ஆச்சர்யப்படுத்தும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான முடிவு சில நேரங்களில் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.
இந்திய பிரதமர் மோடியை, நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகிவற்றிற்கு எதிராக ஒரு முடிவை கட்டாயப்படுத்தி, மிரட்டி அல்லது வலுக்கட்டாயமாக எடுக்க வைக்க முடியும் என்று என்னால் கற்பனை செய்த கூட பார்க்க முடியவில்லை. அதுபோன்ற நெருக்கடி மோடிக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும் என புதின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், ரஷியாவின் பெயரை குறிப்பிடாமல் ஒருமனதாக பிரகடனம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய பிரதமர் மோடிக்கு புதின் நன்றி தெரிவித்திருந்தார்.