Tamilசெய்திகள்

ரஷ்யாவில் ரத்தம் சிந்துவதை தவிர்த்த வாக்னர் குழுவுக்கு நன்றி – ரஷ்ய அதிபர் புதின் அறிக்கை

ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.

இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி. வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.