ரஷியாவில் அணை உடைந்த விபத்தில் 15 பேர் பலி

ரஷியாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் திடீரென சுரங்கத்தின் மேல் உள்ள நீர்த்தேக்கம் உடைந்து தண்ணீர் சுரங்கத்திற்குள் புகுந்தது.

இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். ரஷ்ய அவசர அமைச்சகத்தின் சைபீரியா மீட்பு மையத்தைச் சேர்ந்த பணியாளர்கள், 5 எம்ஐ -8 ஹெலிகாப்டர்கள், எம்ஐ -26 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட விமானப் பிரிவும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டன.

இந்நிலையில், ரஷியா நாட்டில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools