X

ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகும் விஜய் அண்டனியின் ‘கொலைகாரன்’

‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘கொலைகாரன்’.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார். நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ரம்ஜான் விடுமுறை நாளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை பாப்டா தனஞ்செயன் வெளியிடுகிறார்.

விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.