ரபேல் விமானங்கள் நிறுத்தப்பட்ட இடத்தில் ஏவுகணை தாக்குதல்
பிரான்சில் இருந்து ஐந்து ரபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருக்கின்றன. நேற்றுமுன்தினம் பிரான்சில் இருந்து புறப்பட்ட ரபேல் ஜெட் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
விமானம் நிறுத்தப்படுவதற்கு முன் ஈரான் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தளம் குறி வைக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. இதற்கிடையே அல் தஃப்ரா விமான நிலையம் அருகே ஈரான் ஏவிய ஏவகணை விழுந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கான சி.என்.என்.-ன் பார்பரா ஸ்டார் செய்தி சேனல், ‘‘ஈரானின் ஏவுகணைகள் தாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய அமீரகத்தில் உளள் தல் தஃப்ரா தளத்திற்கும், கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமான தளத்திற்கும் எச்சரிக்க விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
என்றாலும் ரபேல் ஜெட் விமானங்கள் கம்பீரமாக இந்தியா பறந்து வந்து கொண்டிருக்கின்றன.