‘ரத்தம்’ படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

நடிகர் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘ரத்தம்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, ‘ரத்தம்’ திரைப்படத்தின் ஐந்து நிமிட ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: tamil cinema