X

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள், சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள் என்று பதிவு செய்து வருகிறார்கள். சிலர் தனுஷ் எப்படி இருக்கிறார் என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா கடந்த ஜனவரி 17 ஆம் தேதி நடிகர் தனுஷை விவகாரத்து செய்து விட்டதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.