பசங்க படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது. இவ்வாறு முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பாண்டிராஜ், தொடர்ந்து வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவர் இயக்கத்தில் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினியின் 169-வது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.