ரஜினி சொன்ன அதிசயம் நடக்கும் – சத்யநாராயண ராவ் பேட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

காவேரிப்பட்டணத்தில் ரஜினி மக்கள் மன்ற நிழ்ச்சியில் பங்கேற்றது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இன்னும் இதே மாதிரி நிகழ்ச்சியில் எல்லா இடத்திலும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நடக்க வேண்டும். நிறைய இடத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லி ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் அரசியலுக்கு வரவில்லையே?

பதில்: அதற்கான காலம் வரும். அடுத்த வருடம் வந்து விடுவார்.

கே: கட்சி கொள்கைகள் பற்றி அறிவிக்காதது ஏன்?

ப: அடுத்த வருடம் எல்லாவற்றையும் அவர் சொல்வார்.

கே: ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் எப்போது நடக்கும்?

ப: 2021-ம் ஆண்டு அதிசயமும், அற்புதமும் நிகழும். அதே ஆண்டு அவர் ஊர், ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திப்பார். 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார்.

கே: உள்ளாட்சி தேர்தலில் மன்ற உறுப்பினர்கள் போட்டியிடக் கூடாது என கூறியுள்ளது பற்றி:

ப: உள்ளாட்சி தேர்தலில் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டாம். உறுப்பினர்கள் கலந்து கொண்டால் தேர்தலில் நின்றது போல் ஆகிவிடும்.

கே: ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்தால் உங்களுடைய பங்களிப்பு எப்படி இருக்கும்?

ப: ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கும். நாங்கள் மக்களுக்கு சேவை செய்வோம்.

கே: நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ப: இல்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் நேரிடையாக போட்டியிடுவார். அவரது நண்பர்களும் போட்டியிடுவார்கள்.

கே: சினிமாவில் நடிப்பது குறித்து?

ப: சினிமாவில் நடிக்கட்டும் பரவாயில்லை. சினிமாவை வைத்து எவ்வளவு மக்கள் பிழைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools