ரஜினி, கமல் இணைவதால் கவலை இல்லை – ஓ.பன்னீர் செல்வம்

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மேயர் பதவி தேர்தலை மறைமுகமாக நடத்தப்படுவது குறித்து எந்த திட்டமும் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் ஊடகங்களுக்கு முதலில் தெரியப்படுத்துவோம்.

ரஜினி-கமல் ஒன்றாக சேரட்டும். அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தொண்டர்களின் மிகப்பெரிய கோட்டை.

அ.தி.மு.க.வின் அடித்தளம் மிகவும் வலுவாக இருக்கிறது. யார் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news