Tamilசினிமா

ரஜினியின் புதிய படம் குறித்த அப்டேட்!

ரஜினியின் அடுத்த படம் யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு அண்ணாத்த படம் ஓடி முடிவதற்குள்ளாகவே எழுந்து விட்டது. எப்படியாவது பெரிய ஹிட் கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ரஜினியை நெருக்கியிருக்கிறது. சமீபத்தில் ஐந்து இயக்குநர்கள் ரஜினியிடம் கதை சொல்ல சென்றிருக்கிறார்கள்.

எல்லோரிமும் தனித்தனியே கதை கேட்டிருக்கிறார் ரஜினி. ஆனால் வந்த எல்லோருமே ஒன் லைன் மட்டுமே சொல்லி ஒக்கே என்றால் முழுக்கதையைத் தயார் செய்கிறேன் என்று ஒரே மாதிரி சொல்லியிருக்கிறார்கள். இது ரஜினியை ரொம்பவே சோர்வடைய வைத்திருக்கிறது.

அப்போதுதான் தனது இன்ஸ்டியூட் நண்பரான அந்த இயக்குநருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். நான் ஒரு வருடத்திற்கு 28 படங்கள் செய்திருக்கிறேன். அவ்வளவு கதைகள் கிடைத்தன. ஆனால் இன்று அப்படிப்பட்ட கதைகள் இப்போது கிடைக்கவில்லையே என்று பேசியிருக்கிறார்.

இந்நிலையில் அடுத்தப்படம் என்பது வெற்றியைத் தொட்டாக வேண்டும், அதோடு படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். இதற்குச் சரியான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என்பது ரஜினியின் விருப்பமாக இருக்கிறது. பல மாதங்களாகவே ரவிக்குமாரிடம் தனது ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி பேசி வந்திருக்கிறார். அதனால் அடுத்தப்படம் தன் ஆஸ்தான இயக்குநர் ரவிக்குமார் என்று ரஜினி தரப்பில் கூறுகிறார்கள்.