ரஜினிகாந்த் போன்ற பொறுப்பான நடிகராக வர வேண்டும் – விஜய் சேதுபதி
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது,
எல்லாரும் கனவு காணுவாங்க, ஆனா நான் காணாத ஒரு கனவு நடந்தது, ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர் கூட நடிச்சதே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போ வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
கார்த்திக் சுப்புராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் போதுல இருந்து தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு, அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். இந்த படத்துலயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கு. கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பாரு. பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கு.
எப்பையமே பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான். மறுபடியும் ஜானுவ இங்கே பார்க்கிறேன்.
இவ்வாறு பேசினார்.