ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததற்கு நன்றி தெரிவித்த நடிகை ரித்திகா சிங்
ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர்,ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த சில மாதங்களாக ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் இதன் படப்பிடிப்புகள் நடந்தது. இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை ரித்திகா சிங் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இப்பதிவில், லெஜெண்ட்ரி தலைவர் ரஜினிகாந்த் அவருடைய அருளும், அவரது ஆத்மாவும், அவரது இருப்பும் நிஜமாகவே நிகரற்றது. இப்போது அவருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறேன். இந்த வாய்ப்புக்காக அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.