Tamilசினிமா

ரஜினிகாந்துக்கு கவர்னர் பதவி கிடைக்குமா? – பதில் அளித்த சகோதரர் சத்தியநாராயணா

மதுரையில் நடந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகரின் திருமண விழாவில், ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா கலந்துகொண்டு வாழ்த்தினார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்” என்றார்.

இதற்கிடையே, ரஜினிகாந்துக்கு, கவர்னர் பதவி கிடைக்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது ஆண்டவன் முடிவு” என்று அவர் பதில் அளித்தார்.