ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

ரஜினி பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நடிகர் அமிதாப் பச்சன் அவரது ட்விட்டரில், நண்பர், சக ஊழியர், உணர்ச்சிப்பூர்வமானவர், பிறந்தநாள் வாழத்துக்கள் ரஜினி என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம் இந்த ஆண்டும் நான் சென்னையில் இருக்க மாட்டேன், எனவே ரசிகர்கள் வீட்டிற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி ரஜினி நேற்று சென்னையில் இருந்து புறப்படார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools