X

ரஜினிகாந்தின் 170 வது திரைப்படம்! – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர் போனி கபூர்

சமீபத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள 169-வது படம் குறித்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து வெளியானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கி அனிருத் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பற்றிய பேச்சு மக்கள் மத்தியில் தனிவதற்குள் ரஜினியின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அதன்படி இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் போனி கபூர் இதனை தயாரிப்பதாகவும் தகவல் பரவிவந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய நீண்ட நாள் நண்பராக இருந்து வருகிறார். வழக்கமாக நாங்கள் சந்திப்பதுடன், சினிமா குறித்த எங்களது கருத்துக்களை பரஸ்பரம் பகிர்ந்தும் வருகிறோம். ஒருவேளை நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தால், அதனை நான் தான் முதலில் அறிவிப்பேன். தற்போது பரவும் தகவல் போல, கசிந்த தகவல்கள் உங்களுக்கு வராது. எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

அதன்படி தற்போது எழுந்திருக்கும் ரஜினி 170-வது படம் குறித்த தகவல்கள் வதந்தி என அறியப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பதாக ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.