X

ரசிகர்கள் செயலை பார்த்து வியப்படைந்த நடிகை பூஜா ஹெக்டே

தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “தென்னிந்தியாவில் சினிமாவுக்கு மக்கள் அமோக ஆதரவு கொடுக்கின்றனர். இதை வேறு எங்கும் பார்க்க முடியாது. தமிழ், தெலுங்கில் நடிகர், நடிகைகளை ரசிகர்கள் ஆராதிக்கிறார்கள். சம்பளமும் அதிகம் கொடுக்கிறார்கள்.

படப்பிடிப்பையும் திட்டமிட்டு விரைவாக முடித்து விடுகின்றனர். இந்தியில் ஒரு படத்தில் நடிக்கும் காலத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 2 படங்களில் நடித்து விடலாம். நடிகர், நடிகைகளை தமிழ், தெலுங்கு ரசிகர்கள் கடவுள் மாதிரி பார்க்கிறார்கள். இங்கு 200 கோடிக்கும் வசூல் செய்யும் படங்களும் உள்ளன.

ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். அபிமான நடிகர், நடிகைகள் படங்கள் ரிலீசாகும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் செய்யும் கோலாகலம் கொஞ்சநஞ்சம் இல்லை. படம் ரிலீசை பெரிய விழாவாக எடுக்கிறார்கள். ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நடிகைகளுக்கு கோவில் கட்டியதும் இங்குதான் நடந்துள்ளது. இவ்வாறு பூஜா ஹெக்டே கூறினார்.