X

ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு மைதானங்கள் இயங்க அனுமதி!

இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் 3-வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய பொது ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதில் ஒன்று ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு மைதானங்களையும், விளையாட்டு காம்ப்ளக்ஸ்களையும் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இதனால் கடந்த 54 நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்குச் சென்று வழிகாட்டு நெறிமுறையின்படி பயிற்சிகளை மேற்கொள்ளலாம். போட்டிகளைக் கூட நடத்தலாம்.

ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகளுக்கு சாத்தியமா? என்ற கேள்வு எழுந்துள்ளது.

ஆனால் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்வதால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவது சாத்தியம் இல்லாதது. அதையும் மீறி வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற சாத்தியம் இல்லை.

Tags: sports news