X

ரசிகர்களோடு சேர்ந்து ‘வலிமை’ படம் பார்த்த அருண் விஜய்

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. வலிமை ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள். மேலும் அஜித்துக்கு கட்-அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்து வைத்தார்கள்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து வலிமை திரைப்படத்தை பார்த்த நடிகர் அருண் விஜய், அப்படத்தையும் நடிகர் அஜித் குறித்தும் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அஜித் சார் திரையில் தோன்றுவதும் குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளும் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.