Tamilசினிமா

ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த இசையமைப்பாளர் அனிருத்

2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. விஜய்
சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி நடித்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு
இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வெளியீட்டை ஒட்டி திரையரங்கில் அதிகாலையில் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதிகாலையில் திரையரங்கிற்கு வருகை தந்த
இசையமைப்பாளை அனிருத், ரசிகர்களுடன் சேர்ந்து சிறப்புக்காட்சியை பார்த்து ரசித்தார்.