தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்டது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் இடம் பெறும் ரகிட ரகிட என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது இப்படத்தில் இடம் பெறும் ‘புஜ்ஜி’ என்ற வீடியோ பாடலை தீபாவளி தினத்தை முன்னிட்டு 13ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சௌந்தரராஜா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.