தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது யானை முகத்தான் என்ற படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். ரஜிஷா மிதிலா இயக்கத்தில் உருவாகி உள்ள யானை முகத்தான் படத்தில் ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. யானை முகத்தான் படம் தமிழ் புத்தாண்டையொட்டி நாளை (14-ந்தேதி) தமிழகம் முழுவதும் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் யானை முகத்தான் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகாது என்றும் அதை தள்ளி வைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ”எந்த காரணமும் இல்லாமல் நாங்கள் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து இருக்கிறோம்” என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.