Tamilசினிமா

யோகி பாபுவின் தர்மபிரபு ஜூன் 28 ஆம் தேதி ரிலீஸ்

`கன்னிராசி’ படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `தர்மபிரபு’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும், ரமேஷ் திலக் சித்திரகுப்தனாகவும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ள படக்குழு, படம் வருகிற ஜூன் 28-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் `வத்திக்குச்சி’ திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோரும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளனர்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பையும், பாலசந்தர் கலை பணியையும் கவனிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *