X

யோகாவிற்கு மதம், மொழி, இனம் என்ற எந்த பேதம் இல்லை – பிரதமர் மோடி பேச்சு

சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் இருந்தே யோகா செய்ய வலியுறுத்தப்பட்டது.

இந்திய பிரதமர் இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து யோகா செய்யுங்கள்.

உங்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக யோகா பழகுங்கள்.

உலக நாடுகள் ஒன்றுபட வேண்டிய தினம்

யோகாவிற்கு மதம், மொழி, இனம் என்ற எந்த பேதம் இல்லை

யோகாவின் பயன்களை முன் எப்போதும் இல்லாத அள்விற்கு நாடு உணர்ந்துள்ளது.

கொரோனாவை வீழ்த்த யோக சிறந்த வழிமுறையாக திகழ்கிறது.. கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள்.

உடல் வலிமையுடன் மன வலிமையையும் தருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் யோகவை பற்றி கூறியுள்ளார்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.