தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று துறவிகளை சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி துறவிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.
இதை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுப்பட்டார். இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து திரும்பிய ரஜினி, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், ரஜினி ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று, அங்குள்ள துறவிகளை சந்துள்ளார். மேலும், அந்த ஆசிரமத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.