யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி – அட்லாண்டா அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் சிட்டி 5-1 என வெற்றி பெற்றது. ரஹீம் ஸ்டெர்லிங் மூன்று கோல்களும், செர்ஜியோ அக்யூரோ இரண்டு கோல்களும் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் ப்ரூக் அணியை 5-0 என வீழ்த்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிலியன் மப்பே மூன்று கோல்களும், இக்கார்டி இரண்டு கோல்களும் அடித்தனர்.
டோட்டன்ஹாம் ஸ்வேஸ்டா அணியை 5-0 என தோற்கடித்தது. ஹாரி கேன் இரண்டு கோல்கள் அடித்தார்.
யுவான்டஸ் 2-1 என லோகோமோட்டிவ் மாஸ்கோ அணியை வீழ்த்தியது. பேயர்ன் முனிச், ரியல் மாட்ரிட், அட்லாண்டிகோ மாட்ரிட் அணிகளும் வெற்றி பெற்றன.