X

யூரோ கோப்பை கால்பந்து – ஆஸ்டிரியாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் டி பிரிவில் ஆஸ்டிரியா மற்றும் பிரான்ஸ் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோலை அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டம் சூடுப்பிடித்து 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்டிரியாவை வீழ்த்தியது பிரான்ஸ்.

கோலோ காண்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.