X

யு.எம் நிறுவனத்தின் கமாண்டோ கிளாசிக் பைக் இந்தியா அறிமுகம்!

யு.ம். மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய பைக் விலை ரூ.1.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனை மையங்களுக்கு வரவிருக்கும் புதிய யு.எம். கமாண்டோ மாடலில் கார்புரேட்டெட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜின் தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய யு.எம். கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளில் 279.5சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட் கூல்டு ஃபியூயல் இன்ஜெக்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் மேலும் சில நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. எனினும், இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

புதிய ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் என்ஜின் வழங்கப்பட்டு இருப்பதால் மோட்டார்சைக்கிளின் விலை ரூ.6,000 வரை குறைந்து இருக்கிறது. இதன் எஃப்1 வெர்ஷன் 25.1 பி.எஸ். அதாவது 23.7 பி.எஸ். மற்றும் 23 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடலில் விரைவில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 மற்றும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிள்களை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய யு.எம். கமாண்டோ பஜாஜ் டாமினர் மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

யு.எம். மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. இதுவரை இந்த மாடலின் முன்பதிவு குறித்து எவ்வித தகவலும் இல்லை.