X

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், கவின் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘ஸ்டார்’

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் பியார் பிரேமா காதல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.

இந்த நிலையில், பியார் பிரேமா காதல்’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, இப்படத்திற்கு ‘ஸ்டார்’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர். ‘ஸ்டார்’ படத்தின் புரோமோ ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2001-ஆம் ஆண்டில் பிரசாந்த் மற்றும் ஜோதிகா நடிப்பில் ‘ஸ்டார்’ படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil cinema