யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கும் கவின்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா யு.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் பியார் பிரேமா காதல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குநர் எலன் இயக்கி இருந்தார்.

இந்த நிலையில், பியார் பிரேமா காதல்’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் கவின் நடிக்க இருக்கிறார். டாடா படத்தைத் தொடர்ந்து கவின் நடிக்கும் இந்த படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema