யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசை ஆல்பம் வெளியிடும் இனியா

தமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா.

நடிப்பை போல் இசை மற்றும் நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. தற்போது ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை தானே சொந்தமாக தயாரித்துள்ளார் இனியா. இந்த பாடலை டீம் மியா குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான ’டிவோ’ மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ’யு1’ ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா.

இதுபற்றி இனியா கூறும்போது, “ முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, விரைவிலேயே தனது நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறேன்” என அவர் கூறினார்.

FacebookFacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools