X

யார் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை – அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பிலான கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செயற்கை நுண்ணறிவு பொருட்கள் மற்றம் தொழில்நுட்பங்களை வெளியிட்டார் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மனித குல முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவு ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்றார்.

இந்த பூமியில் மிகவும் வளர்ச்சியடைந்த உயிரினம் மனிதன் என்பதற்கு இதுவே ஆதாரம் என்றும் அவர் கூறினார். மனித மூளை படைப்பாற்றல் கொண்டது, அறிவாற்றலை பிரதிபலிக்கும் திறன் கொண்டது, அறிவாற்றலை உண்டாக்கும் நுண்ணறிவை தூண்டக்கூடியது என்பது வியப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் அறிமுகப்படுத்தியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டார். யார் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை என்றாலும், எதிர்கால அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே, செயற்கை நுண்ணறிவு திறன் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவை மனிதகுல முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.