நடிகர் ஜாக்கி சானிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரது, தனித்துவமான சண்டை காட்சிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ஜாக்கி சான் நேற்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். முன்னதாக, ஜாக்கி சானின் மிகவும் வயதான தோற்றம் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பலரும், ஜாக்கி சானின் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளும்படி வருத்தம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, தனது பிறந்த நாள் முன்னிட்டு நன்றிகளுடன், விளக்கமும் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜாக்கிசான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்து பலரும் எனது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வருவதை பார்த்தேன்.
யாரும் வருத்தப்பட வேண்டாம். வயதான கதாபாத்திரத்தில் நான் நடித்து வரும் புதிய படத்துக்கான தோற்றம்தான் அது. புதிய விஷயங்களை முயற்சிப்பது எப்போதும் எனக்கு
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.