2019 ஆண்டில் யமஹா நிறுவனத்தின் முதல் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. அந்த வகையில் யமஹா நிறுவனம் தனது FZS-FI மாடலான FZ16 மோட்டார்சைக்கிளை ஜனவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
யமஹா FZ16 வடிவமைப்பு FZ25 மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. புதிய FZ16 மோட்டார்சைக்கிளின் டேன்க் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இத்துடன் புதிய ஹெட்லேம்ப் கிளஸ்டர் ஒன்றும் வழங்கப்படுகிறது. தற்போதைய FZs மாடல்களில் ஹாலோஜன் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில்,FZ16 மாடலில் எல்.இ.டி. லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர மோட்டார்சைக்கிளின் பின்புறம் சிறியதாக்கப்பட்டு, முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட டையர் ஹக்கர் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மோட்டார்சைக்கிளின் டெயில் லைட்கள் மற்றும் இன்டிகேட்டர்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
யமஹா FZ16 மாடலில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. தற்போதைய FZs மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின் 13 பி.ஹெச்.பி. பவர், 12.8 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனால் புதிய மோட்டார்சைக்கிள் அதிக செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.
தற்போதைய மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் யமஹா FZ16 மோட்டார்சைக்கிளில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படும்.
யமஹா நிறுவனம் சமீபத்தில் தனது YZF-R15 V3.0 மோட்டார்சைக்கிளில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியை வழங்கியது. புதிய யமஹா R15 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் டார்க்நைட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய யமஹா R15 ஏ.பி.எஸ். மாடல் விலை ரூ.1.39 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.