கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து த.மா.கா. தலைவர் வாசன் கோவை சிங்காநல்லூர், இடையர்பாளையம் பிரிவில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
போதைப் பொருள் கடத்தலிலும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவிலும், டாஸ்மாக் மது விற்பனையிலும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வஞ்சிப்பதிலும் தான் தி.மு.க. அரசு முன்னிலையில் உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்கு வங்கிக்காகவே பயன்படுத்துகின்றனர். இந்த இரு கட்சிகளுமே பாராளுமன்ற தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. இது இஸ்லாமியர்களுக்கு செய்யும் துரோகமாகும். ஆனால் சிறுபான்மையின மக்கள் மேம்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதமர் நரேந்திரமோடி பிரதிபலிக்கிறார்.
பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கோவை தொகுதியை நன்கு அறிந்தவர். இந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பது அவருக்கு தெரியும். தமிழகம் முழுவதும் நடை பயணம் செய்து மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து வைத்துள்ளார். அதனால் அவரை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு கோவை தொகுதி மக்களுக்கு உள் ளது. அதன் மூலம்சிறந்த எம்.பி.யை தேர்ந்தெடுத்த பெருமை கோவை மக்களுக்கு சேரும்.
மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வருவது மிக அவசர தேவையாகும். இன்றைய தமிழக வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம். தி.மு.க. அரசு விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம், பத்தி ரப்பதிவு கட்டணம் உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வு என மக்கள் தலையில் மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்துள்ளது.
மக்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது. காலையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 உத வித்தொகை கொடுத்து விட்டு மாலையில் குடும்ப தலைவரிடம் இருந்து டாஸ்மாக் வழியாக அதை தி.மு.க. பிடுங்கி கொள்கிறது. தி.மு.க. டாஸ்மாக் வியாபார அரசாக மாறி இருக்கிறது. இனியும் பெண்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம். நீங்கள் போடும் ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கானது. இரு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம், உலகளவில் இரண்டாம் இடத்துக்கு உயரும். உங்களுக்காக உழைக்க தாமரைக்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.