X

மோசமான சாதனையை பதிவு செய்த ஜோ ரூட்

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இங்கிலாந்து ஸ்பின்னர் டாம் பெஸ் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதனால் 2-வது இன்னிங்சில் பகுதி நேர பந்து வீச்சாளரான இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் எதிர்பாராத விதமாக விக்கெட்டுக்களை அள்ளினார்.

அவர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். என்றாலும் அவர் வீசிய ஒரு ஓவரில் மகாராஜ் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விளாசினார். அதன்பின் இரண்டு சிக்சர்கள் தூக்கினார். கடைசி பந்தில் பை மூலமாக நான்கு ரன்கள் சென்றது. இதன்மூலம் ஜோ ரூட் ஒரே ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் இதற்கு முன் இரண்டு பந்து வீச்சாளர்கள் 28 ரன்கள் விட்டுக்கொடுத்ததே மிகவும் மோசமான சாதனையை இருந்தது. அந்த இருவர்களுடன் தற்போது ஜோ ரூட் மோசமான சாதனையில் இணைந்துள்ளார்.

இதற்கு முன் லாரா ராபின் பீட்டர்சன் பந்தில் 28 ரன்களும், ஜார்ஜ் பெய்லி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் 28 ரன்களும் கொடுத்துள்ளனர்.

Tags: sports news