X

மோகன்லாலுடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி – சூர்யா

சூர்யா நடிப்பில் தற்போது இரு படங்கள் தயாராகி வருகின்றன. செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் காப்பான் படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடிக்க மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்காக மோகன்லாலின் முகநூல் பக்கத்தில் இருந்து லைவ் வீடியோ வெளியிடப்பட்டது. ஐதராபாத்திலிருந்து ஒளிபரப்பான இந்த நேர்காணலில் மோகன்லால் பல வி‌ஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது சூர்யாவும் வீடியோ கான்பரன்சிங்கில் இணைந்தார்.

காப்பான் படம் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ’இந்தப் படத்தில் பிரதமராக மோகன்லால் சார் நடித்திருக்கிறார். அவரைப் பாதுகாக்கும் கமாண்டோ வீரராக நான் நடித்திருக்கிறேன். மோகன்லால் சாரோடு நடித்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி. இந்தப் படம் விடுமுறை நாளை குறிவைத்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடத்திட்டமிட்டிருக்கிறோம்” என்று சூர்யா கூறினார்.