Tamilசெய்திகள்

மொகாலியில் உளவுத்துறை தலைமை அலுவலகம் மீது கையெறி குண்டு வீச்சு!

பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் மாநில காவல்துறையின் ஒரு பிரிவான உளவுத்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மொகாலி உளவுத்துறை தலைமை அலுவலகம் அருகில் நேற்று இரவு 7:45 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் கையெறி குண்டை வீசி எறிந்து தப்பியோடினர். வெடிவிபத்து ஏற்பட்டது போன்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கையெறி குண்டுவீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராக்கெட் லாஞ்சர் மூலம் இந்த கையெறி குண்டு வீசப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய போலீசார் சம்பவ இடத்தை ஆய்வுசெய்தனர்.

முதல் மந்திரி பகவந்த் மான் விரைவாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.