மே 6 ஆம் தேதி வெளியாகும் ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’
உலக அளவில் புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ வெளியீட்டிற்கு முன்னரே ரூ.10 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ள
நிலையில், வரும் மே 6 ஆம் தேதி இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு இந்தியாவில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பதிவு தொடங்கப்பட்டது.
உலக திரை வரலாற்றில் ஒவ்வொரு முறை பாக்ஸ் ஆபிஸ் சாதனை முறியடிக்கபடும் போதும், மார்வல் திரையுலகின் திரைப்படம் அதில் இருக்கும், அதுபோல இந்த முறை ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி
மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ திரைப்படம் ஒரு புது சாதனையை நிகழ்த்தவுள்ளது. ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகவுள்ள இந்த திரைப்படம், அட்வான்ஸ்
முன்பதிவு மூலமாகவே ரூ.10 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது, இன்னும் படம் வெளியாக 8 நாட்கள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
மார்வல் ஸ்டுடியோஸ் உடைய ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ திரைப்படம் 2022-ல் உலகமெங்கும் அனைத்து திரை ரசிகர்களாலும் எதிர்பார்க்கபடும் திரைப்படமாக
உள்ளது. இந்த மிகப்பிரமாண்டமான பொழுதுபோக்கு திரைப்படம் வெளியீட்டிற்கு 30 நாட்களுக்கு முன்னர், அட்வான்ஸ் முன்பதிவு செய்யும் விஷயத்தில், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஹாலிவுட் திரைப்படத்தில் இப்படியொரு அட்வான்ஸ் முன்பதிவு செய்வது இதுவே முதல்முறை.
இது குறித்து கூறிய பி.வி.ஆர் பிக்சர்ஸ் சி.இ.ஓ கமல் ஜியான்சந்தனி, “மார்வல் திரைப்படங்கள் எப்பொழும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தும். ஒரு மாதத்திற்கு முன்னரே அட்வான்ஸ்
புக்கிங் செய்யும் முடிவு, ஸ்டூடியோ செய்ய புத்திசாலிதனமான விசயங்களில் ஒன்று. அட்வான்ஸ் புக்கிங்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, ரசிகர்களிடமிருந்து வரும் வரவேற்பு, இந்தியா
முழுவதும் ஷோக்களை சீக்கிரம் ஹவுஸ்புல் ஆக்கிவிடும்.” என்றார்.