மேலும் 3 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர தடை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக, மார்ச் 31-ம் தேதி வரை நாடு முழுக்க உள்ள பள்ளிகள் கல்லூரிகள், நீச்சல் குளங்கள், மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களை மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர பல்வேறு பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மார்ச் 31-ம்தேதி வரை பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசுக்கு 7,171 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் தற்போது வைரஸ் பரவுவது குறைந்துள்ள நிலையில் மற்ற நாடுகளில் அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools