X

மெல்போர்னில் ரன்கள் எடுப்பது கடினமாக உள்ளது – புஜாரா

மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா சதம் அடித்தார். 280 பந்தில் சதம் அடித்த புஜாரா, 319 பந்தில் 106 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 204 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிந்த பின்னர் சதம் அடித்த புஜாரா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் “மெல்போர்ன் ஆடுகளம் ரன்கள் சேர்க்க மிகவும் கடினமாக உள்ளது. முதல் இரண்டு நாட்களில் இந்தியாவின் ஸ்கோரை பார்த்தீர்கள் என்றால் மிகவும் குறைவு. ஒருநாளைக்கு 200 ரன்கள் என்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். நாங்கள் போதுமான ரன்கள் குவித்துள்ளோம்” என்றார்.