மெரினா புரட்சி ஒரு தலைவரை அடையாளம் காட்டவில்லை! – நடிகர் பொன்வண்ணன் வருத்தம்

மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் நடைபெற்ற படத்தின் அறிமுக விழாவில், பங்கேற்று பேசிய நடிகர் பொன்வண்ணன், மெரினா போராட்டத்தை போல், ஒரு போராட்டத்தை தாம் பார்த்தது இல்லை என்றும், இனிமேல், நாம் பார்க்க போவதும் இல்லை என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ஜாதி மத பேதமின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதாகவும், ஆனால் இந்தப் போராட்டம் முழுமையாக வெற்றி பெற்று விடக் கூடாது என்று போலீசார் தடியடி நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools