Tamilசெய்திகள்

மெரினா கடற்கரையை அழகுப்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ஆயிரம் விளக்கு பகுதியில் பசுமை பூங்கா அமைத்து, சாலை வசதியை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.